இராமேஸ்வரத்தின் அழகு..!

5
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாமை பற்றிதெரிந்தவர்களுக்கு, நிச்சயமாக இராமேஸ்வரம் பற்றி தெரிந்திருக்கும். எத்தனை பேருக்கு இராமேஸ்வரம் பற்றி தெரிய வேண்டுமோ, அத்தனைபேருக்கும் அதன் அழகைப் பற்றியும், அவலங்களைப் பற்றியும் என்னால் முடிந்த வரை எழுதுகிறேன், தவறுகள் இருந்தால் மன்னித்துவிடுங்கள் (தயவு செய்து பின்னூட்டத்தில் எழுதுங்கள்).


இயற்க்கை என்றாலே விந்தை தானே...! அதன் அழகிற்க்கு ஈடு இணை உண்டா என்ன?
--------------------------------------------
இராமேஸ்வரம்

திசையறியாக் கடல் நடுவே திக்கற்றத் தனித் தீவாய்,
தாலாட்டும் தமிழ்த் தாயின் தடம் பட்டக் காலடியாய்,
பணம் பார்த்தப் பரங்கியனின் பொருளீட்டுப் புகழிடமாய்,  
கடல் அன்னையின் கோபத்தில் உயிரற்ற அடிச்சுவடாய்,
இதிகாச இராமனின் சிவ வழிபாட்டு ஆலயமாய்,
இந்த இராமேஸ்வரம். 

உலகின் மிக அறிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் மன்னார் வளைகுடாவின்
பாம்பன் கடற்கறை,

------------------------------------------------

இரவின் பிடியில் தோல்வியுற்று தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் பகலவன்...! 

பிறப்பாய் புதுப் பிறவியாய்...
என ஆர்ப்பரிக்கும் கடலலைகள், 

----------------------------------------------------- 
இன்னும் ஐந்தே ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாட காத்திருக்கும் காவியமாய்....
பரங்கியன் விட்டுச்சென்ற பாம்பன் பாலம்.-------------------------------------------------------- 
குழந்தைக்கு உயிரூட்டும் தொப்புல் கொடிதானோ என சற்றெ சிந்த்திக்க வைக்கும் தரைப் பாலம்.


---------------------------------------------------- 
இருட்டடைந்த மனத்தோரே...
இறைவனின் பார்வை பட்டால்...
காரிருலும் கலங்கிடுமே...
என பறைசாற்றும் இராமநாத சுவாமி கோவிலின் உலகப் பிரசித்தி பெற்ற மிக நீண்ட பிரகாரம்.

-------------------------------------------------- 
கடல் அன்னையின் கோபங்கள், 
புயல் தின்றுவிட்ட எச்சங்கள்,
மனித குலத்தின் இறுதி நாளை,
உறுதியாக எச்சரிக்கும்... தனுஸ்கோடி,

------------------------------------------------------------
பாலூட்டி அன்னை வளர்ப்பாள்..
பாசத்துடன் தந்தை வளர்ப்பான்..
பிறப்பறியா கடல் அலையே..
பின் நிற்க்கும் கடல் அன்னையே...
நீ தந்த பிச்சையிலே.. பிழைத்தேனே இது வரையில்..
சிங்களனின் தாசித் தனத்தால்.. சிதைகின்றோம் மறுமுறையும்....!
நீ தந்த மூச்சினிலே... மீண்டும் பிறப்போம் உன் உடலாய்...
கடல் அலையாய்....!
வாழ்வாதாரம் தேடிப் போராடும்,
என் மீனவன்.
தொடர்வேன் அவலங்களுடன் அடுத்த பதிப்பில்.......
நிழற் படமும், எழுத்தும்....

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.இரா