ஒற்றைத் துளி..!!

0

கண்ணின் விசும்பல் கவிதையாய்
சிந்தும் இரத்தச் சிதறலாய்
உயிரின் பிறப்பில் மூலமாய்
முகில் அதன் சிரிப்பில் மழையாய்
பாலையில் தாகத் தேவையாய்
பணிக்கால பசும்புல் நுனியாய்
நாளைய தேவையின் சேமிப்பாய்
சலனமில்லா உருவமாய்
அந்த ஒற்றைத் துளி..!!